


மட்டக்களப்பு சித்தாண்டியில் இயங்கி வரும் சுவாமி நடராஜநந்தஜீ சிறுவர் புனர்வாழ்வு நிறுவனத்தில் 40 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு கல்வியூட்டப்படுகிறார்கள்.
இதன் தலைவர் ஜ.கமலநாதன் ஆகிய நான் மட்/காரைதீவைப் பிறப்பிடமாகவும் பாடசாலை அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்று தற்போது தொண்டர் சேவையாற்றும் நோக்குடன் 7 நிர்வாக உறுப்பினருடன் பிரதேச சபை நிதி கட்டுப்பாட்டுடன் கடந்த 15 வருடங்களாக மேற்படி சிறுவர் இல்லத்தை இயக்கி வருகிறேன்.
இதற்கான நிதி உள்ளூர் நலம் விரும்பிகள், தொண்டர் தாபனங்கள் மற்றும் ஒரு சில வெளி நாட்டில் வாழும் எம் உறவுகள் மூலம் கடந்த காலங்களில் பெறப்பட்டு வந்தது. இங்கு பராமரிக்கப்பட்ட பல அனாதைச் சிறுவர்கள் தற்போது பட்டம் பெற்று நன்னிலைக்கு உயர்த்தப்பட்ட பெருமை இவ்வில்லதைச் சாரும். ஆனாலும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு எமது இல்லத்தைப் பாரிய நிதி நெருக்கடிக்கு நெருக்கடிக்கு உள்ளாக்கியதுடன் பல அனாதைச் சிறுவர்களை இல்லத்தில் சேர்ப்பதற்கு இயலாத நிலைக்குத் தள்ளியுள்ளது. எனவே கருணை கூர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் இப்பிள்ளைகளின் நலம் விரும்பும் எம் உறவுகள் உங்களால் இயன்ற சிறு தொகையாவது எமது இல்லத்து வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு தயவாய் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பெயர், விலாசம் என்பவற்றுடன் தொடர்பு கொண்டால் மேலதிக் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
Children's Home - Batticaloa

Account Information
Seylan Bank
Batticaloa Branch
Account Number: 0730-07301-534-101
Seylan Bank
Chenkalady Branch
Account Number: 1670028-500
Address of Childrean Home:
Swami Natarajananda Ji Childrean Rehabilitation Foundation Institute
Main Street
Sittandy (E.P)
Batticaloa
Sri Lanka
Telephone Number: +94-65-3652928